மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரிக்குள் வீதியால் சென்று கொண்டிருந்த நண்டு ஏற்றிச் சென்ற கனரக லொறியொன்று பாதையை விட்டு விலகி பாடசாலைக்குள் நுழைந்ததில் பாடசாலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டு மின்கம்பங்களை உடைத்துச் சென்றுள்ளது.
இன்று புதன்கிழமை (07) காலை அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலீசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரிக்குள் வீதியால் சென்று கொண்டிருந்த மட்டக்களப்பில் இருந்து கிராங்குளம் நோக்கி நண்டு ஏற்றிச் சென்ற கனரக லொறியொன்று வீதிகட்டுப்பாட்டை மீறி பாதையை விட்டு விலகி பாடசாலைக்குள் நுழைந்ததில் பாடசாலை முன்பகுதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வாகனசாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து மக்கள் பெரும் பதற்றமடைந்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.