வரதன்
நாம் எந்த கட்சிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் உங்களது பெருமதியான வாக்குகளை மக்கள் நன்கு சிந்தித்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பில் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர் எமது கட்சி தான் மக்களுக்கான அரசியல் விமோசனத்தை கொண்டு வந்தது மாற்று சமூகம் பயப்படுகின்ற அளவுக்கு மக்களுக்கான அரசியல் அந்தஸ்தை தந்த கட்சியாகவும் கிழக்கு மாகாணத்தில் ஒரு சொந்தக் கட்சியாக அரசியலில் முன் வந்து கொண்டிருக்கின்றது
அரசியல்வாதிகள் மக்களின் வாக்கு பிச்சையில் தான் வாழ்ந்து கொண்டிரு க்கின்றார்கள் இதனை மக்கள் நன்கு சிந்தித்து எந்த நேரத்திலும் எந்த காலத்திலும் எமது மட்டக்களப்பு மண்ணை நேசிக்கின்ற அரசியல் தலைமை களை நீங்கள் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் இடம்பெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நன்கு சிந்தித்து
நாம் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எதற்காக வாக்களிக்க வேண்டும் போட்டியிடுகின்ற கட்சிகளில் எமது மண்ணைத் தேடி எமது வீட்டு வாசலில் வந்து உங்களுக்கு ஒரு பிரச்சனைகள் என்றால் முன்னிற்கும் கட்சி யார் என்று சிந்தித்து உங்களது பெருமதியான வாக்குகளை அளிக்குமாறு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்





