பிள்ளையானின் தோல்வி சொல்ல வரும் செய்தி என்ன ?மட்டக்களப்பின் அபிவிருத்தியை விட தங்கள் சுயநிர்ணய உரிமை முக்கியமானது.

 


முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முதற்தடவையாக பாராளுமன்றத்திற்குள் நுழையாமல் தோல்வியடைந்துள்ளார்

மட்டக்களப்பின் அபிவிருத்தியை விட தங்கள் சுயநிர்ணய உரிமை முக்கியமானது என்ற செய்தியை மட்டக்களப்பு தமிழ் மக்கள் உலகத்துக்கு சொல்லி உள்ளார்கள் .

2020 கடந்த பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் புலிகள் கட்சி 67,692 வாக்குகளை பெற்றிருந்தன , 2024 ஆண்டு பொது தேர்தலில் தமிழ் மக்கள் புலிகள் கட்சி 31286 வாக்குகளை பெற்றிருக்கிறது .வாக்கு வங்கியில் மிகப்பெரிய சரிவை கட்சி சந்தித்துள்ளது . பல அபிவிருத்தி திட்டங்கள் பிள்ளையான் அவர்களால் நடை முறை படுத்தி இருந்தாலும் , இம் முறை பாராளுமன்றத்திக்கு தெரிவு செய்யப்படாதது இழப்பாகவே பார்க்கப்படுகிறது .

சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பொது வாசிக சாலை கட்டட நிர்மாணப்பணிகள் முற்று பெறாமல் உள்ளது.

இதை கட்டி முடிப்பது யார் ? காலந்தான் பதில் சொல்ல வேண்டும்