இன்று (14) வியாழக்கிழமை இடம்பெறும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2 மற்றும் 3 என இலக்கங்கள் அல்லது புள்ளடி பயன்படுத்தப்பட்டன.
எனினும், பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போதும், விருப்பு வாக்குகளை வழங்கும்போதும் புள்ளடியை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.
எனவே, உரிய முறையை பின்பற்றி அளிக்கும் வாக்கினை செல்லுபடியாகும் வாக்காக வாக்காளர்கள் மாற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.





