பொது தேர்தல் 2024: மட்டக்களப்பு, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன .

 


இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (13) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்தில் இருந்து இன்றையதினம்  காலை முதல் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.