சர்வதேச சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஏற்பாட்டில் 5 பாலர் பாடசாலை சிறார்களுக்காக சுற்றுலா நிகழ்வு.

 

 




 














இன்றைய சர்வதேச சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவர்களின் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட 5 பாலர் பாடசாலை சிறார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா நிகழ்வு.

கிரான் புலிப்பாஞ்சகல் பாலர் பாடசாலை, கௌரி பாலர் பாடசாலை மற்றும் வந்தாறுமுலை சக்தி பாலர் பாடசாலை  , பலாச்சோலை விபுலானந்த பாலர்பாடசாலை    ,ஆரையம்பதி நலன்புரி பாலர் பாடசாலை  ஆகிய பாலர் பாடசாலை சிறார்களை மட்டக்களப்பு கல்லடி ராமகிருஷ்ண மிஷன்,  அத்தோடு விவேகானந்த பூங்கா, கோட்டை பூங்கா மற்றும் கல்லடி பாலம்  போன்றவற்றை பார்வையிட்டு அதன் பின்னர் புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் அவர்களிற்கான சிறுவர் நிகழ்ச்சிகள் நடைபெற்று சிறுவர்களிற்கான பரிசுகள் வழங்கப்பட்டது.

சிறார்களை மகிழ்விக்கும் சிறுவர் தின நிகழ்வு கொண்டாட்டங்களுடன் இவ்வாறான செயற்பாடுகள்  அவர்களை மகிழ்விப்பதுடன் பல விடயங்களை அவர்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் கூடியதாக அமைகின்றது எனவும், இவ்வாறான நிகழ்வுகளிற்கு ஆதரவாக இருக்கும் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களிற்கும்  இந் நிகழ்வினை ஒழுங்குபடுத்த உதவிய பாலர் பாடசாலை ஆசிரியைகளிற்கும்  நன்றியினை கூறிக்கொள்வதாக  விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்..