காட்சி – 1
ஆம் விபத்து… பெரு விபத்து நல்ல காலம் விபத்தாலும் சரி, விபரீதத்தாலும் சரி… உயிருக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை
இரு ஜீபனோபாய தொழில்கள்…. ஒன்று உணவு… மற்றொன்று உணவில்லாமல் மட்டக்களப்பில் பல ஏழைக்குடும்பங்கள் சீரந்து போன வடிசாரயம். நோர்மையாக உழைத்து தங்களது எதிர்காலத்தை முன்னேற்ற வேண்டிய 19 வயது இளைஞர்கள் தங்களது உந்துருளியில் மறைத்துக் கொண்டுவந்தது பதினைந்து (15) இருபது ( 20) போத்தல்கள் வடிசாரயம் அடங்கிய மூடை. நல்லகாலம் இன்றைக்கு மட்டும் ஒரு 15 குடும்பங்கள் இந்த வடிசாராய அரக்கனிடமிருந்து தப்பியிருக்கும்.
காட்சி – 2
விபத்து நடந்த இடத்திற்கு மக்களும் குவிந்தவண்ணம் இருந்தார்கள் பின்னால் சிவில் உடையில் பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் இச் சம்பவத்தைக் கண்டு தமது கடமையுனர்வில் அச்சம்பவம் தொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கும் போதே இவ்விரு இளைஞர்களும் சர்வ சாதாரணமாக அக்கூட்டத்திலிருந்து தப்பி ஒடிய சம்பவம் அக்கூட்டத்திலிருந்த மக்களுக்கு விபத்தைவிட பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருந்தும் அந்தக் கடைக்காரர் 119 எனும் பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தியிருந்தார்.
காட்சி – 3
சம்பவ இடத்திற்கு வருகை தந்த இன்னொரு பொலிஸ் உத்தியோகத்தர் விபத்து சம்பந்தமாக விசாரித்துக் கொண்டிருக்கும் போது தமது இன்னோரு சகாவைத் தேடி தப்பியோடிய இளைஞர்களில் ஒருவர் மீண்டும் வந்து தாமாக மாட்டிக்கொண்டார்.
மக்கள் : “டேய் நீ இத எங்கடா கொண்டு போய் கொடுக்க போனநீ?”
வடியுடன் பிடிபட்ட இளைஞன் : “ குருக்கள்மடத்துக்………
பொலிஸ் உத்தியோகத்தர் : “ இவனுக்கே தெரியாது…. வைக் ஓட்டி வந்தவனுக்குத்தான் தெரிந்திருக்கும்”
( கூடியிருந்த மக்கள் ஆளையாள் பார்த்து சலசலத்துக் கொள்கிறார்கள் )
மக்களில் ஒருவர் : “டேய் இந்த வருசம் சடங்குக்குள்ள வடியோட வந்து புடிபட்டு அடிவாங்கின நீதானேடா….? “
வடியுடன் பிடிபட்ட இளைஞன் : (திரு திரு என முழிக்கிறார்)……
இந்த புதிய ஆட்சியிலாவது இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் அதே இளைஞர்களை மீண்டும் அதே பொலிசாரிடம் ஒப்படைக்கிறார்கள்.
சபாபுத்திரன்