சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து கிழக்கு தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவோம் , ரணிலை ஜனாதிபதியாக்குவோம்- பூ பிரசாந்தன்

 

 

வரதன்

 

 

 

 

உண்மையாகவே நாட்டை நேசிக்கின்ற தலைவர்களா சஜித் பிரேமதாச மற்றும் அனுரா குமாரதிசநாயக்க  இருப்பார் ஆனால் அவர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும்- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சி செயலாளர் பூ பிரசாந்தன் தெரிவித்தார்

கடந்த காலங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக சிரமப்பட்ட போது அவர்களை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இந்த நாட்டுக்கு நல்ல ஒரு தலைவர் தேவை அதற்காக அவரை ஆதரிக்கின்றோம் சகல ஆற்றல்களும் உடைய தலைவராக அவர் காணப்படு வதால் எமது கட்சி அவரை ஆதரிக்கின்றது.
நாடு ஆபத்தில் இருக்கும் போது விட்டுச்சென்ற அவர்கள் இன்று நாட்டை தாருங்கள் என்று கேட்கின்றார்கள்

 இம்முறை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்வதற்கு நமது கட்சி அதிகப்படியான ஆதரவினை அவருக்கு வழங்கும். உண்மையாகவே நாட்டை நேசிக்கின்ற தலைவர்களா சஜித் பிரேமதாச மற்றும் அனுரா குமாரதிசநாயக்க  இருப் பார் ஆனால் அவர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும்


இன்று நாட்டை பாதுகாக்கின்ற தலைவராக இருந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் பார்க்கின்ற இடங்கள் எல்லாம் அபிவிருத்திகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதியே ஆதரிக்க வேண்டும் என நமது கட்சியின் தலைவர் தீர்மானம் எடுத்துள்ளார் எனவே அவரது. சின்னத்துக்கு வாக்களித்து  கிழக்கு தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவோம். என

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சி செயலாளர் பூ  பிரசாந்தன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.