எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.