“சரத் பொன்சேக்காவின் சேவை இராணுவத் தளபதியாகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன. யுத்த களத்தில் மாத்திரமின்றி அரசியல் களத்திலும் வரலாற்று வெற்றியை அவர் பதிவு செய்வார்” என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் ‘இராணுவத்தளபதி நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதி’ நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை கொழும்பு, தாமரை தடாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தாா்.