வாகன இறக்குமதி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

 


எதிர்காலத்தில் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், நாட்டின் நிதி விவகாரங்களில் வழிகாட்டியாக மாறியுள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் பல நிதி விடயங்கள் கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்படும் என குறிப்பிட்டார்.

இதன்படி, வாகன இறக்குமதியானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான வரைபடத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம்  சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த வரைபடத்திற்கு அமைய பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் இருந்து குறிப்பிட்ட முறையின் கீழ் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.