விறகு எடுப்பதற்காக சென்ற நபர் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் .

 


திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் காட்டுப் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

குறித்த தாக்குதல் சம்பவத்தில் பள்ளிக்குடியிருப்பு - தங்கபுரத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து திருமகன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விறகு எடுப்பதற்காக சென்றபோதே குறித்த நபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.