மட்டு. ஆரையம்பதியில் பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி ஆளுநரால் திறந்து வைப்பு!

 


 








(கல்லடி செய்தியாளர் &பிரதான செய்தியாளர்)


உள்ளூர் விற்பனையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்காக ஆரையம்பதியில் பொதுச் சந்தைக் கடைத்தொகுதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை  திறந்து வைக்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் யோ.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் தட்சணகௌரி தினேஸ், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

உலக வங்கியின் நிதி உதவித் திட்டத்தின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்தும் எல்.டி.எஸ்.பீ  வேலைத் திட்டத்தின் கீழ் 6.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நான்கு கடைகளைக் கொண்ட இந்தக் கட்டிடத் தொகுதி ஆரையம்பதியில் திறந்து வைக்கப்பட்டு உள்ளூர் விற்பனையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.