எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை (Sri Lanka) சிறு கைத்தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை சங்கத்தின் தலைவர் நிலுக்ச குமார(Niluksa Kumara) தெரிவித்துள்ளார்.
கப்பல் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் காரணமாகவே இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.