மருத்துவர் நித்தி கனகரத்தினம் எழுதிய "பாரம்பரிய தமிழர் உணவுகளின் போசணைக் கூறுகள்" நூல் வெளியீடு!




































(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர் )

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் இயற்கை மருத்துவ நிபுணர் நித்தி கனகரத்தினம் எழுதிய "பாரம்பரிய தமிழர் உணவுகளின் போசணைக் கூறுகள்"- ஓர் அறிவியல் நோக்கு நூல் வெளியீடு இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜீ மகராஜ் ஆன்மீக அதிதியாகவும்,கிழக்குப்  பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கnj விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியை புளோரன்ஸ் பாரதி கென்னடி,கிழக்குப் பல்கலைக்கழக விவசாயத்துறைப் பீடாதிபதி பேராசிரியை புனிதா பிரேமானந்தராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில்,தமிழ்த்தாய் வாழ்த்தினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் கு.விநாயகமூர்த்தி இசைக்க,வரவேற்பு நடனம் அரங்கேறியது.

இதன்போது வரவேற்புரையினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசாவும்,நூலாசிரியர் அறிமுகத்தினை கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் விவசாய பீட பீடாதிபதி கலாநிதி க..பிரேமகுமாரும்,நூல் நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட பேராசிரியர் த.சுந்தரேசன் ஆகியோர் நிகழ்த்தினர்.

நிகழ்வில் நூலாசிரியர் நித்தி கனகரத்தினத்திடமிருந்து முதன்மைப் பிரதியினை கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் த.ஜெயசிங்கம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அதிதிகள் மற்றும் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்களுக்குச் சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதியாக நன்றியுரையினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் துணைப் பொதுச் செயலாளர் இரா.பிரதீஸ்காந்த் நிகழ்த்தினார்.