சாம் தம்பிமுத்து தம்பதிகளின் முதலாவது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது

 

 










வரதன்


தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பி முத்துவின் தந்தையார் சாம் தம்பி முத்து தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டு 34 ஆண்டுகளுக்குப் பின் இடம்பெற்ற முதலாவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது


 அன்னாரது உருவப்படத்திற்கு அருண் தம்பி முத்து மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் சாம் தம்பி முத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஆற்றிய அரசியல் அபிவிருத்தி பணிகள் சம்பந்தமான சிறப்புரைகளும் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை சம்பந்தமாகவும் இங்கு விசேட உரை நிகழ்த்தப்பட்டது.