பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மட்டக்களப்புக்கு விஜயம்!



















(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர் )

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று சனிக்கிழமை (25) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மட்டக்களப்பு  ஈஸ்ட் லகூன் விருந்தினர் விடுதியில் மக்களுடனான விஷேட சந்திப்பு இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன்,பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்ததாவது:-

நாட்டில் கோட்டபாய ராஜபக்ச புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த முனைந்த வேளையில் எதிர்பாராத விதமாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் புதிதாக இரண்டாண்டுகள் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க கொரோனா,பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டை ஓரளவு தலைநிமிரச் செய்துள்ளார்.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் ஓன்றிணைந்து நாம் ஆட்சிபீடம் ஏற வழிசமைக்க வேண்டுமென்றார்.

இதன்போது ஊடகவியலாளர்களால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் யாரை நிறுத்தவுள்ளீர்கள் எனக் கேட்டனர்.

நாங்கள் சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் விரும்பும் ஒருவரையே நிறுத்துவோம் எனப் பதிலளித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்களால் பல கோரிக்கைக் கடிதங்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.