மட்டக்களப்பு-களுவன்கேணி திருவருள்மிகு பேச்சியம்மன் ஆலய 71வது வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்தி பெருவிழானது எதிர்வரும் மங்களகரமான குரோதி வருடம் வைகாசி 11ம் நாள் 24.05.2024 (வெள்ளிக்கிழமை) பிரதமை திதியும் கேட்டை நட்சத்திரமும் சித்த யோகமும் சுபவேளையில் மாலை5.00மணிக்கு களுவன்கேணி சிங்காரதோப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து மடைஎடுக்கும் வைபத்துடனும் பேச்சி தாயவளின் திருக்கதவு திறத்தளுடனும் ஆரம்பமாகிறது .
தொடர்ந்து சடங்கு உற்சவம் 5 நாட்கள் நடைபெற்று வைகாசி 15 நாள் 28.05.2024(செவ்வாய்க்கிழமை) பஞ்சமி திதியும் உத்திராட நட்சத்திரமுமம் சுபயோகமுமம் கூடிய அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையி 3.30மணி தொடக்கமுள்ள சுபவேளையில் தாயவளுக்கு பள்ளைய பெலிகரும பூசையுடம்நிறைவு பெறும்.
.பூசைகள் யாவும் உற்சவ கால குரு தவத்திரு இள. ரமேஸ்குமார் ஜயா அவர்களினாலும் மற்றும் ஆலய பிரதம குரு சிவத்திரு. அவிரொளிசிவம் தெ.ராஜ்குமார் ஜயா அவர்களின் சீடர்களால் நடைபெறும்.
.பேச்சி அம்மனின் வருடாந்த திருச்சடங்கில் கலந்து கொண்டு பேச்சி தாயாரது திருவருளை பெற்றேகுமாறு பணிவன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர் .









