சட்டவிரோதமாக ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது .

 


இலங்கை சிறார்களை மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று முன்தினம்  மாலை அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என திணைக்களத்தின் விசாரணை அதிகாரி எம்.ஜி.வி. காரியவசம் தெரிவித்துள்ளார்.

தெஹிவளையை சேர்ந்த 76 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், இலங்கையை சேர்ந்த 17 சிறார்களை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து வௌியேற்றி ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.