கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தக் கோர விபத்து எம்பிலிப்பிட்டிய, நோநாகம வீதியில் பெமினியன்வில பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மாத்தறை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மூவரும் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.