இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் KTP Consultancy & Traininng நிறுவனத்தின் நிறுவுனர் Dr.K.T.Prashanthan அவர்கள் தலைமையில் வெற்றிக்கான மென் திறன்கள் செயலமர்வு நடை பெற்றது. .

 









 Dr.K.T.Prashanthan

மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்திலுள்ள இலுப்படிச்சேனை  அம்பாள் வித்தியாலயத்தில் தரம் 10-13 மாணவர்களுக்கு Rotary Club of Batticaloa Heritage (RCBH) ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for Success - S3) எனும் தலைப்பிலான தொழில்வாண்மைத்துவ சுய ஊக்குவிப்புப் பயிற்சி 16/3/2024 இல் நடைபெற்றது .

தமது 598வது பயிற்சியாக இதனை இலாப நோக்கற்ற அடிப்படையில்(Not-for-Pர்ofit basis) KTP Consultancy & Traininng  நிறுவனத்தின் நிறுவுனர் Dr.K.T.Prashanthan அவர்கள் வளவாளராக வழங்கினார்.

கல்லூரியின்  அதிபர் திரு.S.கிரிஷாந்தன்  அவர்கள்  தலைமையில்  RCBH நடத்திய இச் செயலமர்வில் அதன் தலைவர் Rtn.கி.கௌரிஸ்வரன், RCBH உறுப்பினர்களான , Rtn.G.D.நிர்மல்ராஜ்,Rtn .T. நவநீதன் ஆகியோரும் சுமார் 50  மாணவர்களும் கலந்து கொண்டனர்.

செயற்றிட்ட நோக்கம், மாணவர்கள் முன்மாதிரியாக நடப்பதன் அவசியம்,சமூகப் பொறுப்புணர்வு என்பவை தொடர்பாக அமைப்பின் தலைவர்  Rtn.கி.கௌரிஸ்வரன் அவர்கள் விளக்கவுரை வழங்கினார்.

ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ளும் கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. எ. பிரியகாந்தன் அவர்களும்  கலந்துகொண்டிருந்தார்.

சாட்டுக்களைச் சொல்லி வளவாய்ப்புக்களைத் தட்டிக்கழிக்காது தொலைநோக்குப் புத்தாக்கத் தலைமைத்துவத்துடன் செயற்பட்ட அனைவரினதும் உயர் பண்பு பாராட்டுக்குரியது.

தேர்ந்தெடுத்த 10 மாணவர்களுக்கு தலா ரூ.4,000/- பெறுமதியான கற்றல் உபரணங்களையும் Rotary Club of Batticaloa Heritage (RCBH) அமைப்பினர் வழங்கினர்.

RCBH மாவட்ட மானியத்தின் (District Grant) செயற்றிட்டமாக மொத்தம் ஐந்து பாடசாலைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது .