ஹெல்ப்எவர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவும், விளையாட்டு நிகழ்வும் மட்டக்களப்பில் இடம்பெற்றது.






























































(கல்லடி செய்தியாளர்)

ஹெல்ப்எவர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழாவும், விளையாட்டு நிகழ்வும் இன்று மட்டக்களப்பு ஜெயந்திபுரத்திலுள்ள   கருவப்பங்கேணி சிவ நாகதம்பிரான் கோவில் முன்பாக உள்ள விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

ஹெல்ப்பவர் நிறுவனத்தின் ஸ்தாபகர் எஸ்.கீர்த்தனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்பிரதாயப்படி பொங்கல் பொங்கப்பட்டு, நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து சிறுவர்களுக்கான முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல்  கோலம் போடுதல் மற்றும் பெண்களுக்கான தேங்காய் திருவுதல் போட்டியும் இடம் பெற்றது
நிகழ்வின் போது சிறுமியர்களின்  நடனமும் இடம் பெற்றது

போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் ஹெல்ப்எவர் நிறுவனத்தின் அங்கத்தவர்களும் பிரதேச வாழ் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்