பலாங்கொடை வெலிகபொல
பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு நோய் நிவாரணம் பெற்றுத்தருவதாகக் கூறி
பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மந்திரவாதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி அவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்
பலாங்கொடை காவல்துறையிடம் முன்வைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த
சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பலாங்கொடை வெலிகபொல பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





