கல்வியில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.

 

 



 











பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையினால் 2023ம் ஆண்டில் சாதனையாளர்களை பாராட்டும் விழா பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில்  (27) திகதி இடம் பெற்றது..
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜி.ஜி.முரளிதரன் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஆர்.வசந்தராசா உட்பட பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.சாதாரணபரீட்சை, க.பொ.த.உயர்தரப்பரீட்சை ஆகியவற்றில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவ மாணவிகள்
நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது