(கல்லடி செய்தியாளர்)
ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளின் பத்தொன்பதாவது ஆண்டு நிறைவினை நினைவு கூரும் முகமாக. புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் "உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்" எனும் தொனிப் பொருளில் மாபெரும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (26) கல்லடி திருச்செந்தூர் முதலாவது சுனாமி நினைவுத் தூபிக்கு அருகாமையிலுள்ள நாவலடி ஆரம்ப மருத்துவ சிகிச்சைப் பிரிவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் திருமதி கீர்த்தி மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் இணைந்து குருதியினைத் தானம் செய்தனர்.
இவ்வாறு குருதியைத் தானம் செய்தோருக்கு இயற்கையின் மொழி அமைப்பின் ஸ்தாபகர் காயத்திரி உதயகுமாரால் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.























