பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

 


அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளார்.