(எம்.எஸ்.எம்.றசீன்)
ஏறாவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தினால் ஏறாவூர் நகர சபை நிருவாகத்தின் கீழ் இயங்கிவரும் நான்கு நூலகங்களுக்கு இன்று(29) பொது அறிவுப் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
ஏறாவூர் பொது நூலகம்,
அகமட் பரீட் பொது நூலகம்,
விவேகானந்தா பொது நூலகம் மற்றும் அம்பாள் பொது நூலகம் ஆகிய நூலகங்களுக்கே இவை வழங்கப் பட்டன.
இந்நிகழ்வில் Lions club of Eravur Supreme செயலாளர் Lion VT. கபூர், இணைப்பாளர் Lion MSM.ஸப்றாஸ் மற்றும் உப பொருளாளர் MHM.ஜெமீல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
உயர் தரப் பரீட்சை மற்றும் போட்டிப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மிகவும் பயன் மிக்க பொது அறிவுப் புத்தகங்களை வழங்கியுள்ள ஏறாவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தினருக்கு நூலக வாசகர்கள் மற்றும் நகர சபை நிருவாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

.jpeg)





