தாம் போட்டியிடப் போவதாகவோ, போட்டியிடப் போவதில்லை என எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை

 


அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் கூறவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஆளும் கட்சி அமைச்சர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தாம் போட்டியிடப் போவதாகவோ, போட்டியிடப் போவதில்லை என எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அதிபர், நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக பல பணிகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.