லங்கா சதொச நிறுவனம் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ளது.
இதன்படி, டின் மீன், கிழங்கு, சிவப்பு அரிசி, பருப்பு, வௌ்ளை பச்சை அரிசி,
வௌ்ளை நாட்டரிசி ஆகிய பொருட்களின் விலையே குறைக்கப்பட்டுள்ளது.
டின் மீன் 55 ரூபாவாலும், கிழங்கு 5 ரூபாவாலும், சிவப்பு அரிசி 5
ரூபாவாலும், பருப்பு, வௌ்ளை பச்சை அரிசி மற்றும் வௌ்ளை நாட்டரிசி ஆகியவை 1
ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





