அரச ஊழியர்களுக்கு இருக்கும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான துறைசார் பேற்பார்வை குழுவின் பிரேரணைக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என அரச மாகாண அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் அமில பண்டார தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச சேவையில் இருந்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரச ஊழியர்களுக்கு இருக்கும் வருடத்துக்கு 45 நாட்கள் என்ற விடுமுறை எண்ணிக்கையை 25 நாட்களாக குறைப்பதற்கு துறைசார் மேற்பார்வைக்குழு பிரேரணை முன்வைத்திருக்கிறது. இதனை எமது சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
அரச சேவையில் பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அரச ஊழியர்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கும் வகையில் விடுமுறை தினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.





