இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணை இராணுவத்தளபதியின் மகன் உயிரிழந்துள்ளார்

 


காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணை இராணுவத்தளபதியின் மகன் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் பலஸ்தீன ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்பின் துணை இராணுவத் தளபதி மர்வான் இசாவின் மகன் முஹம்மது இசா வியாழக்கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மர்வான் இசா, ஹமாஸ் அமைப்பின் காஸா இராணுவத் தளபதி முஹம்மது டெய்ஃபின் உயர்மட்ட துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.