சுனாமி குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தபட உள்ளது

 


 சுனாமி குறித்த முன்கூட்டியே அறிவிக்கும் புதிய தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.

"சுனாமி அபாயம் உள்ள 14 மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுனாமி அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் தொடர் தொலைபேசி ஒலியுடன் உடனடியாக தகவல் தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சித் திட்டம் அனைத்து தொலைபேசி சேவையாளர்களின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படும்." என்றார்.