மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள் ?

 


 

 மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப்பொருள் ஒன்று  கரை ஒதுங்கியுள்ளது.
நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
இந்நிலையில் அப்பொருள் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள் தொடரச்;சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு
பெரும் தடையாக அமையும், எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை களுவாஞ்சிகுடி பொலிசாரும் பார்வையிட்டுச்
சென்றுள்ளனர் என அப்பகுதி மீனவர்கள் குறிப்பிட்டனர்.
சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக இப்பொருள் அமைந்துள்ளதுடன், பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும்
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதுடன், குறித்த பொருளின் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.