மட்டக்களப்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் புனித மரியாள் பேராலயத்தில் இடம் பெற்றது .


  

 












(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினைக் குறிக்கும் 2023 இற்கான கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் இன்று திங்கட்கிழமை (25) மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் இறை சிந்தனையுடன் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில், ஆலய பங்குத் தந்தை வணபிதா ஜீவராஜ் மற்றும் பெருமளவிலான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு ஆராதனைகளில் ஈடுபட்டனர்.

ஆலயத்தைச் சுற்றியுள்ள சூழலில் ஆயுதம் தாங்கிய பொலிசாரும், இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.