பாகிஸ்தான் நாடளுமன்ற பொதுத்தேர்தலில் முதல் முறையாக இந்துப்பெண் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் 16 ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் 2024 பெப்ரவரி 8ஆம் திகதி நடைப்பெறவுள்ளது.
அந்த வகையில், பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனூடாக பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப்பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ் பெற்றுள்ளார்.





