மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலாக பிரிவுகளில் 17 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு!!

 



மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடும் மழையினால் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாகப்பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று வெல்லாவெளியில் உள்ள இரண்டு கிராமங்களில் 14 குடும்பங்களும், கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை மற்றும் எறாவூர்ப்பற்று செங்கலடி, மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை ஆகிய ஒவ்வொரு கிராமங்களில் தலா ஒரு குடும்ப வீதம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.