மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆழிப்பேரலை நினைவுத் தூபியில் நினைவு கூரல்-2023




























(கல்லடி செய்தியாளர்)


கல்லடி திருச்செந்தூர் நினைவுத்தூபி ஏற்பாட்டுக் குழுவினரால் ஆழிப்பேரலை நிகழ்ந்து பத்தொன்பதாவது ஆண்டினை நினைவு கூரும் வகையிலான நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு திருச்செந்தூர் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உட்பட மதத் தலைவர்கள், சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு கொண்டனர்.

இதன்போது அதிதிகள் மற்றும் பொதுமக்களால் அகல் விளக்கேற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.

ஆழிப்பேரவை அனர்த்தத்தில் தமது உறவுகளை இழந்த தாய், தந்தையர்கள், மற்றும் உறவினர்கள் கதறியழ  உணர்வு பூர்வமாக  நினைவு கூரப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.