வரதன்
ஜனாதிபதியின் விசேட பணிபுரையின் பெயரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இன்று பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை முன்னெடுப்பு.
பாதுகாப்பு அமைச்சினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் பரிசோதனை மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக முன்னெடு க்கப்பட்டு வருகின்றது இதேவேளை மட்டக்களப்பு தலைமையக போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரிந்த பண்டார தலைமையில் இன்று பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது நகருக்குள் வரும் சகல பொதுமக்களின் அடையாள அட்டைகள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் அவர்களது பயணிகள் பேக்குகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
விசேட மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட அதிரடி படையினரின் பலத்த பாதுகாப்பு மத்தியில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது இதன் போது சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் நகரில் 2 பேர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களின் ஹெல்மெட். மற்றும் பைகள். பேக்குகளும் உடன் பரிசோதனை களும் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணை க்காக மட்டக்களப்பு தலைமையக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல ப்பட்டுள்ளதுடன். மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போதைப் பொருள் பரிசோதனை பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





