மண்முனைப்பற்று பிரதேச செயலக கலைஞர் ஒன்றுகூடல்!

 


 

மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் ஆலோசனையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் கதிரவன் பட்டிமன்றப் பேரவை நடத்திய மண்முனைப்பற்று பிரதேச கலைஞர் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மட்டக்களப்பு தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மீனாட்சி மரத்தடியில்  இடம்பெற்றது.

கதிரவன் கலைக்கழகம் மற்றும் கதிரவன் பட்டிமன்றப் பேரவைத் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதன்போது மாவட்ட கலாசார இணைப்பாளர்  த.மலர்ச்செல்வன்,  மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், இந்து கலாசார உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கலைஞர்களின் அனுபவ பகிர்வு மற்றும் கலை நிகழ்வுகள் என பல்வேறு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் சமூக முன்னேற்றம் சார்ந்து செயற்படும் கதிரவன் பல்வேறு நற்பணிகளை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு பண்பாடு சார்ந்து விருந்தோம்பல் இடம்பெற்றமையும் சிறப்பாகும்.

இதன்போது கதிரவன் ஆலோசகர் அமரர் த.தயாபரமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.