சுகாதார மேம்படுத்தல், சுகாதார தகவல்மையம் தொடர்பான பயிற்சிப்பாசறை 14.10.2025 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் டாக்டர் சதுர்முகம் மண்டபத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் R.முரளீஸ்வரன் அவர்களின் பணிப்புரைக்கமைய இடம்பெற்றது.
இதில் ஆதாரவைத்தியசாலைகள்,பிரதேச வைத்தியசாலைகளிலிருந்து தாதிய உத்தியோகத்தர்கள்,சுகாதார உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் முனைப்புடன் கலந்து கொண்டனர்.சுகாதார அறிவூட்டல்களும், விழிப்புணர்வு ஏற்படுத்தல் முறைகளும்,சமுகத்துடன் இணைந்து பல்முக ஆளணியாக செயற்படலுக்கான புதிய திட்டங்களை உருவாக்குதல் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் சுகாதார தகவல்மையம் தொடர்பான சேவைகள், அவற்றை மேம்படுத்துவதற்கான புதிய,ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை செயல்படுத்தல் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.இதன்மூலம் ஒவ்வொரு தனிநபரும் தாமே தம்முடைய ஆரோக்கியத்தை பற்றி முன்கூட்டியே அறிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு சிறப்பான , ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்பலாம்.இதில் பிராந்திய பணிமனையின் சுகாதாரமேம்பாட்டுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி மு.அச்சுதன் அவர்களும், தர முகாமைத்துவம்,நோயாளர் பாதுகாப்புக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி J.சகாயதர்ஷினி அவர்களும் வளவாளர்களாக பங்கேற்றமை குறிப்பிடதக்கது.