மட்டக்களப்பில் கண்டன போராட்ட மொன்று இடம்பெற்றது.

 

 


 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தொடர்புகளைப் பேணியதாக, அக்கட்சியின் முன்னாள் உறுப்பினராக அசாத் மௌலான
சனல்-4 தொலைக்காட்சிக்கு கருத்துத் தெரிவித்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை திசை திருப்ப வேண்டாம் என வலியுறுத்தி
மட்டக்களப்பில் கண்டன போராட்மொன்று இடம்பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தலைமையில் போராட்டம் இடம்பெற்றது.
அக் கட்சியின் மட்டக்களப்பு தலைமையகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நிறைவடைந்தது.
சனல்-4 தொலைக்காட்சிக்கு எதிரான வாசகங்கள், ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசை திருப்ப வேண்டாம், உண்மையான சூத்திரதாரிகளை
கண்டறி போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் , இளைஞர் ,யுவதிகள் பெருமளவானவர்கள் போராட்டத்தில்
பங்கெடுத்தனர்.