பெண்குழந்தைகள் 3 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

 


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண்குழந்தைகள் 3 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளை உடனே வீட்டுக்கு அனுப்புமாறு பாடசாலைகளுக்கு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இது அங்குள்ள மாணவிகள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாது, வெளியில் காரில் பெண்கள் பயணம் செய்யும் போது ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர்.
இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும் அதை தலிபான்கள் கண்டுகொள்ளாமை பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.