"வாடி வீடு” என்ற பெயரில் 100 புதிய வாடி வீடுகள் திறக்கப்படும்.

 


 லங்கா ரெஸ்ட் ஹவுஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் துலிப் விஜேசேகர கூறுகையில், இந்த வருடத்திற்குள் சுற்றுலா தலங்கள் உள்ள இடங்களில் “வாடி வீடு” என்ற பெயரில் 100 புதிய வாடி வீடுகள் திறக்கப்படும்.

இந்த வாடி வீடுகள் சுற்றுலா சபை மற்றும் தனியார் துறையின் ஒப்பந்தத்தில் நடத்தப்பட உள்ளதாக தலைவர் வலியுறுத்தினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

லங்கா ரெஸ்ட் ஹவுஸ் லிமிடெட் நிறுவனம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் 2007 இல் ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, மாத்தறை, பேராதனை உள்ளிட்ட தற்போது 25 வாடி வீடுகள் தமது நிறுவனத்தின் கீழ் இயங்கி வருவதாக லங்கா ரெஸ்ட் ஹவுஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார்.

லங்கா ரெஸ்ட் ஹவுஸ் லிமிடெட்டின் கீழ் இயங்கும் வாடி வீடுகளை இலாபகரமானதாக மாற்றுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.