மக்கள் பேரவை இயக்கத்தின் தலைவராக செயற்பட்டு வரும் வசந்த முதலிகே தலைமையிலான குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்.

 


 

மக்கள் பேரவை இயக்கத்தின் தலைவராக செயற்பட்டு வரும் வசந்த முதலிகே தலைமையிலான குழுவினர் கிழக்கு
மாகாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் பேரவை இயக்கத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல், இன்று மட்டக்களப்பு
ஊறணியில் உள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பிற்கு வருகை தந்த வசந்த முதலிகே தலைமையிலான குழுவினர் மக்கள் பேரவை இயக்கத்தை
உருவாக்குவது தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர்.