இன்று 37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து நளினி அகிலேஸ்வரன் ஓய்வு

 






















மட்டக்களப்பு மேற்கு வலய மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய  ஆசிரியை
திருமதி. நளினி அகிலேஸ்வரன்  தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று(28) செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார்.

அவரின் ஆசிரிய சேவை நிறைவையொட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் பிரியாவிடை வைபவம் அதிபர் எஸ்.ஜமுனாகரன் தலைமையில் நேற்று  இடம்பெற்றது.

அவ்வமயம் அவரது துணைவர் ஓய்வு நிலை அதிபரும் முன்னாள் கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளருமான சிவஞானம் அகிலேஷ்வரனும் சமூகமளித்திருந்தார்.

 முதலைக்குடா ஓய்வு நிலை தபாலதிபர் வேலுப்பிள்ளையின் மகளான இவர்  1988ம் ஆண்டு முதலைக்குடா மெ.மி.த.க வித்தியாலயத்தில் ஆசிரியராக முதல்  கடமையை  ஆரம்பித்து முதலைக்குடா மகா வித்தியாலயம் மற்றும் கொக்கட்டிச்சோலை மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி இறுதியாக மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் சேவையாற்றி தனது 37 வருட ஆசிரிய சேவையில் இருந்து நேற்று 28.10..2025 ஓய்வுபெற்றார்.

நாளை (29) புதன்கிழமை அவரது பிறந்த நாள் வைபவம் திருகோணமலை நிலாவெளி சீவியூ விடுதியில் அவர் சார்ந்த மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் 1991/92 அணியினரால் கொண்டாடப்படுகிறது.
 
( வி.ரி. சகாதேவராஜா)