நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய2௦௦௦ரூபாய் நாணயத்தாள் மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளன.

 


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை வௌியிட்டுள்ளது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த புதிய நாணயத்தாள்களின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களடங்கிய தகவல்களே மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தாளின் நம்பகத் தன்மையை எளிதாக அடையாளம் காண்பதற்கான அறிவுரைகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த 2000 ரூபா நாணயத் தாளை வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால்,வாளினை கொண்ட சிங்கம் முழுமையாக தெளிவாக தெரியும், நிறம் மாறும். பாதுகாப்பு நூல் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறி, கொழும்பில் உள்ள கடிகார கோபுரத்தினை காட்டுகிறது.இதிலிருந்து போலித்தாள்களை அடையாளம் காண முடியும். மேலும் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஆறு தொட்டுணரக்கூடிய பட்டைகளும் இத்தாள்களில் உள்ளன. புற ஊதா ஒளியின் கீழ், ஆண்டு கருப்பொருளில் ஒளிரும் இரட்டை வண்ணங்கள் மற்றும் முன்வானலை தோன்றும் மதிப்பும் தெரியும். இதனால் உண்மையான ரூபாய் தாள்களை இயந்திரத்தினால் அடையாளம் காண முடியும் என்பதால், போலி நாணயத் தாள்களை கண்டுபிடிக்கவும் இந்த அம்சங்களைப் பயன்படுத்துமாறு மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்துகிறது.