வாகரை இறாலோடை - காயாங்கேணி இணைப்பு பாலத்தின் மீள் நிர்மாண வேலையினை தோழர் திலிப்குமார் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

 






 

 

 வாகரை இறாலோடை - காயாங்கேணி இணைப்பு பாலத்தின் மீள் நிர்மாண வேலையினை கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், இளைஞர் விவகார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தோழர் திலிப்குமார்  நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சரது பங்குபற்றலோடு இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் 250 மில்லியன் ரூபாய்கள் விசேட நிதியினை சிறிய பாலங்கள், வீதிகள் அபிவிருத்திக்காக  செலவிட வேண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுனில்ஹந்துன்நெத்தி போக்குவரத்து அமைச்சிடமிருந்து பெற்றுக் கொடுத்திருந்தார்.

அதன் ஒரு பகுதியாக இறாலோடை - காயாங்கேணி இணைப்பு பாலத்தின் மீள் நிர்மாண வேலைக்காக 18 மில்லியன் ரூபாய்கள் நிதியானது தேசிய மக்கள் சக்தி  அரசினால் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

அது மட்டுமல்லாமல் பெரிய காயாங்கேணி மதகின் திருத்த வேலைக்காகவும் பொதுமக்கள் முன் வைத்த கோரிக்கையினை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் நிமித்தம் குறித்த மதகினைத் திருத்தம் செய்யும் வேலைகளை வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பித்திருக்கிறது.

காயாங்கேணிக்கு கள ஆய்வினை மேற்கொண்டு இந்த வேலைத் திட்டங்களை   கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், இளைஞர் விவகார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தோழர் திலிப்குமார்  நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.