மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சாப்பமடு மற்றும் வாகநேரி வயல் பிரதேசத்தில் கொரியன் கம்பனி ஒன்றினால்
அமைக்கபடவுள்ள
சோலர் மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்படும் நிலையில், கள
நிலவரங்களை பார்வையிட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,
அதிகாரிகள் சகிதம் அப் பகுதிக்கு விஜயம் செய்தார்.
கிரான்
பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, மாவட்ட கமநல திணைக்கள பிரதி விவசாய
ஆணையாளர் கே.ஜெகநாத், மகாவலி அதிகாரிகள் மற்றும் வன இலகா அதிகாரிகளும்
இராஜாங்க அமைச்சரின் விஜயத்தில் பங்கெடுத்தனர்.
நீண்ட
காலமாக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும், சுமார் 353 ஏக்கர் வயல்
நிலத்தை சோலர் மின் உற்பத்தித் திட்டத்திற்காக சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்படுவதாகவும்,
இதனை தடுக்குமாறு காணி உரிமையாளர்களால் இராஜாங்க அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தமது
காணிகளுக்கு பதிலாக மாற்று காணியும், நஷ்டஈடும் வழங்க கிழக்கு மாகாண
ஆளுநர் செயலகம் எடுத்துள்ள நடவடிக்கையினை நிராகரிப்பதாகவும் காணி
உரிமையாளர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்வரும் மாவட்ட அபிவிருத்தி
குழு கூட்டத்தில் இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டி, மக்களுக்குப்
பாதிப்பில்லாத வகையில் இத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.