பணம் வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

 


இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளி தரப்பினருக்கும் பணம் வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது
.இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாகவே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலை வாய்ப்புகள் உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் வேலை வாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் எதிர்வரும் 26ஆம் திகதி இஸ்ரேலுக்கு செல்ல உள்ளனர்.2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதல் இஸ்ரேலில் தாதியர் துறையில் 389 இலங்கையர்கள் பணி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.