தீக் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 


அம்பாறை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிலுள்ள பொலிவோரியன் கிராமத்தில் தீக் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி, சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.


கடந்த 6ம் திகதி, சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், யுவதி தீக் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.


கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அதிவிஷேட சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யுவதி , சிகிச்சை பலனின்றிக் காலமானார்.
சியாம் ஆயிஸா என்ற 19வயதுடைய யுவதியே உயிரிழந்தவராவர்.